“பம்பர கண்ணாலே…. பச்ச குத்த வந்தாலே” ….. என்று டான்ஸ் ஆடிய நமீதாவா இது….. எப்படி ஆயிட்டாங்க பாருங்க…..
நடிகை நமீதா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர், 2001ம் ஆண்டு சிறந்த மாடலாக தேர்ந்தெடுக்க பட்டு தமிழ் திரை உலகில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார். இவர் சரத்குமார்,விஜயகாந்த், விஜய், அஜித் மற்றும் ஸ்ரீ காந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று தனக்கென தனி இடத்தை பெற்றுள்ளார்.குறிப்பாக மானாட மயிலாட, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்குபெற்று தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்துள்ளார். இவர் மேடை ஏறும் போதெல்லாம் அவர் கூறும் “மச்சான்” என்கிற வார்த்தைக்கு இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பிருக்கும். இவர் தமிழ் மற்றும் இன்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் தடம் பதித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு தொழில் அதிபரான வீரேந்திர சவுத்திரியை திருமணம் செய்து கொண்டார். இவர் பா.ஜா.க கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தையும் மேற்கொண்டுள்ளார்.
தற்போது நமீதா கடந்த ஆகஸ்ட் மாதம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாய் ஆனார். இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருப்பார். மேலும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம். தற்போது அவர் பகிர்ந்த புகைபடம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனனில் அவர் உடல் எடை குறைந்து எலுமும், தோலுமாக காட்சி அளிப்பது தான். எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு மிகவும் உடல் மெலிந்து காணப்படுகிறார். தற்போது சமூகவலைத்தளங்களில் இவரின் புகைப்படம் பேசு பொருளாக மாறியுள்ளது.