படிக்காதவன் படத்தில் சின்ன வயது ரஜினியாக நடித்தது இந்த நடிகையின் கணவரா…? புகைப்படத்தைப் பார்த்து ஆச்சர்யப்பட்ட நெட்டிசன்கள்…!

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும் என ரஜினியின் திரைப்படத்தில் ஒரு பாடல் உண்டு. அது இப்போதும் ரஜினிக்கு பொருந்தும். இன்றும் ரசிகர்கள் மனதில் நிரந்தர சூப்பர் ஸ்டாராகவே உள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினி ஒரு பிரமாண்டமான வர்த்தகப் பொருள். 70 வயதிலும் அவருக்கான வேல்யூ அப்படியே இருப்பதுதான் அவரின் பலம்.கருப்பு, வெள்ளை காலம் எனப்படும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் தொடங்கி, கலர் படம் காலம் வரை திரையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். கோச்சடையானில் அனிமிசேனாகவும் வந்தார். 2.0 திரைப்படத்தில் 2 டி தொழில்நுட்பத்திலும் நடித்தார். இத்தனை காலத்தையும் வேறு எந்த தென்னிந்திய நடிகர்களும் சாத்தியப்படுத்தியதில்லை.

சாதாரண கண்டக்டராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய ரஜினிகாந்த் இன்று புகழின் உச்சத்தில் இருக்க அவரது திறமையே காரணம். ஸ்டைலான நடிப்பால் இந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் ரஜினி. இப்போதும் அவர் ஹீரோவாக நடித்திருக்கும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி வெளியீடாக வந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்கி இருந்தார். தொடர்ந்து சன் பிக்சர்ஸின் அடுத்த படத்திலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து மெகா ஹிட்டான படங்களில் ஒன்று படிக்காதவன். தான் கஷ்டப்பட்டாலும் தன் தம்பியை அதில் நன்கு படிக்க வைப்பார் ரஜினி. இந்தப் படத்தில் சிறுவயது ரஜினிகாந்தாக நடித்தவர் தான் சூர்யா கிரண். இவர் இது உள்பட பல படங்களிலும் சின்ன வயது ரஜினியாக நடித்தார். சரத்குமார், விஜயகாந்திற்கும் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்துள்ளார். இதுவரை 150க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார் சூர்யா கிரண்.
இவர் இப்போது வளர்ந்து திருமணமும் ஆகிவிட்டது. இவரது மனைவி காவேரியும் நடிகையாவார். சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்து ஹிட் ஆனவர்தான் காவேரி.இதேபோல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கேரக்டரில் நடிக்கும் நடிகை சுஜிதாவின் சொந்த சகோதரர் தான் இவர். இப்போது சினிமாவில் எதுவும் நடிக்காவிட்டாலும் சூர்யா கிரண் ஸ்கிரிப்ட் ரைட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.
படிக்காதவன் படத்தில் சின்ன வயது ரஜினியாக நடித்தது இந்த நடிகையின் கணவரா என நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
