தெய்வமகள் சீரியல் புகழ் வாணிபோஜனா இது? இணையத்தில் வெளியான புகைப்படம்.. கிரங்கிபோன ரசிகர்கள்..!

அண்மையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு புரமோஷன் ஆகி நகர்ந்திருந்தார் வாணி போஜன்.ஊட்டியை பூர்வீகமாகக்கொண்ட அம்மணிக்கு இப்போது 33 வயது. மாடலிங் முலமாக சின்னத்திரைக்குள் நுழைந்தவர் விஜய் டிவியில் ஆஹா என்னும் சீரியலில் அறிமுகம் ஆனார். சன்டிவியின் தெய்வ மகள் சீரியலால் வாணிபோஜன் பட்டி, தொட்டியெங்கும் ரீச் ஆனார். லெட்சுமி வந்தாச்சு சீரியலும் இவரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

அம்மணி துவக்கத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸில் பணிப்பெண்ணாகவும் வேலைசெய்தார். அண்மையில் சினிமாவுக்குள் நுழைந்தவர் மீக்கு மாத்திரமே செப்தா என்னும் தெலுங்குப்படத்தில் அறிமுகம் ஆனார். தமிழில் ஓ மை கடவுளே படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து வேறுசிலபடங்களிலும் நடித்து வருகிறார்.
ப்ரியா பவானி ஷங்கர் துவங்கி வாணி போஜன்வரை சின்னத்திரை பிரபலங்கள் இப்போது வெள்ளித்திரையை நோக்கியே நகர்கின்றனர். அதிலும் வாணி போஜனை சின்னத்திரை நயன்தாரா என்றே கொண்டாடத் துவங்கி இருக்கிறது கோடம்பாக்கம். இந்நிலையில் அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளுக்காக அம்மணி அடிக்கடி தன் புகைப்படங்களையும் வெளியிட்டுவருகிறார்.

எப்போதும் தன் சோசியல் மீடியாவிலும் ஆக்டீவாக இருக்கும் வாணி போஜன் இப்போது செம க்யூட்டாக ஒரு போட்டோசூட் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த படத்தில் கொள்ளை அழகில் வாணி போஜன் ஜொலிக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
pic1

pic2
