தூய்மைப் பணியாளர்களுக்கு வாலிபர் கொடுத்த சர்ப்ரைஸ்.. நெகிழவைக்கும் வீடியோ காட்சி..!

தூய்மைப் பணியாளர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். அவர்களை நாம் மிகவும் மதிக்க வேண்டும். கரோனா காலக்கட்டத்தில் அவர்கள் தங்கள் உயிரையே துச்சமென மதித்து வேலை செய்ததை நாமெல்லாம் பார்த்திருப்போம்.
தினமும் காலையில் நம் வீடு தேடிவந்து குப்பைகளை சேகரித்து வாங்கும் தூய்மைப் பணியாளர்களையும் நாம் பார்த்திருப்போம். நாமும், நம் சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என அவர்கள் அதிகமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப் பணியாளர்கள் இப்படி உழைத்தாலும், அவர்களுக்கு சம்பளம் என்னவோ மிகவும் சொற்பம் தான்.

நாம் என்றாவது அவர்களின் உழைப்பை மெச்சி பாராட்டியிருக்கிறோமோ என்று யோசித்துப் பாருங்கள். இங்கே ஒரு இளைஞர் பைக்கில் சுற்றுகிறார். நேரே தூய்மைப் பணியாளரைப் பார்க்கிறார். அவர்களின் அருகில் பைக்கை நிறுத்தி, டிஸ்யூம் என தன் கையைக் குவித்து, அவர்களையும் டிஸ்யூம் என வைக்க அழைக்கிறார். அவர்கள் டிஸ்யூம் என வைத்ததும், தன் கையைத் திறக்கிறார் அந்த வாலிபர்.

அவரது கைக்குள் சாக்லேட் இருக்கிறது. அந்த சாக்லேட் பத்து ரூபாய் தான். என்றாலும் இதில் அந்த தூய்மைப்பணியாளர்கள் அடையும் மகிழ்ச்சிக்க் அளவே இல்லை. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.