திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லும் தங்கை.. தங்கைக்காக கதறி அழும் அண்ணன்கள்.. இந்த பாசத்துக்கு முன்னாடி எதுவும் பெருசு இல்லை…!

cry_thangai_vid_nz

அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் அளவிடவே முடியாது. திருப்பாச்சி படத்தில் இளைய தளபதி விஜய், தன் தங்கை மேல் அதீத பாசத்தோடு இருப்பார். அதேபோல் தங்கைகளின் மீது உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

அண்ணன்களுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், தங்கைகளுக்கு அப்பாவாக மாறிப்போகும் அண்ணன்களும் இங்கு அதிகம். வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கு பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து மிளிர்கின்றனர். அண்ணன்களின் பாசம் அந்தவகையில் அளவிட முடியாது.

உலகில் மிகப்பெரிய வலிமையுள்ள விசயம் என்ன தெரியுமா ‘பாசம்’. அதில் அண்ணன், தங்கை பாசம் என்பது வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது.

தன் தாய் வயிற்றில் கருவை சுமக்கும் போதே, முதல் குழந்தையாக இருக்கும் ஆண் குழந்தை தங்கையின் வரவுக்கு துள்ளித் துடிப்பான். இதேபோல் பல இல்லங்களில் தம்பி பாப்பாக்களுக்கு இரண்டாவது தாயாகவே மாறி இருப்பாள் அக்கா. பள்ளிக் கூடத்துக்கு கையை பிடித்து அழைத்துச் செல்வது, காலையில் குளிப்பாட்டி, டிரஸ் செய்து விடுவது என தம்பிகளின் அழகிய பொழுதுகளில் அக்காக்களின் கைவண்ணமும் இருக்கும். அதனால் தான் மணம் முடிந்த பின்னர் தன் கணவர் இல்லத்துக்கு செல்லும் அக்காக்களை பிரிய முடியாமல் ஓவென்று அழுகின்றனர் தம்பிகள். அதேபோல் தங்கைகளாக இருந்தால் அண்ணன்கள் கதறி அழுகின்றனர். அவர்களைப் பிரிந்து செல்ல மணமின்றி தங்கைகளும் அழுது வடிக்கின்றனர்.

இங்கேயும் அப்படித்தான் திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டிற்கு, மணப்பெண்கள் செல்கிறார்கள். அந்தப் பிரிவு தாங்க முடியாமல் அண்ணன்களும், புதுமணப்பெண்களும் கதறி அழுகிறார்கள். குறித்த இந்த காணொலி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன். இந்த பாசத்திற்கு முன்பு எதுவுமே பெரிய விசயம் இல்லை.

You may have missed