டாப் 10 புகழ் தொகுப்பாளர் சுரேஷா இது? ஜிம்முக்குப் போய் உடம்பை எப்படி ஜம்முன்னு வைச்சுருக்காரு பாருங்க..

      இப்போதுதான் படம் ரிலீஸ் ஆனதுமே ஆள், ஆளுக்கு ரிவியூ சொல்லி முகநூலிலும், யூ டியூப்பிலும் போட்டுவிடுகின்றனர். ஆனால் முன்பெல்லாம் அப்படி ஒரு காலமே இல்லை. சன்டிவியில் டாப் 10 மூவிஸ்  ரிவியூ பார்த்துவிட்டுத்தான் படத்துக்கு செல்லும் வழக்கம் இருந்தது. இந்தப்படத்தோட விமர்சனத்தை ஏற்கனவே போதுமான அளவிற்கு பார்த்துவிட்டோம். இந்த வார முதலிடத்தில் என அதன் தொகுப்பாளர் சுரேஷ்குமார்  பேசும் வசனங்களே மிகவும் ரசனையாக இருக்கும். 

சுரேஷ்குமார் சொல்லும் விமர்சனத்தைக் கேட்டுவிட்டுத்தான் படத்திற்குச் செல்வோம். வெள்ளிக் கிழமை படம் ரிலீஸாகும். ஞாயிற்றுக்கிழமை ரிவியூ வரும். இப்போது சுரேஷ்குமாரும் அந்த ப்ரோகிராம் சன் டிவியில் நின்றுபோன நிலையில், யூடியூப்பில் விமர்சனங்கள் சொல்லிவருகிறார். மனிதர் இப்போதும் உடம்பை ஜம்மென மெயிண்டைன் செய்கிறார்.

இப்போது சுரேஷ்குமார் சட்டையைக் கழட்டிவிட்டு, தன் கட்ஸ் தெரியும்படி தான் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே உங்களுக்கு வயசே ஆகாதா சார்? எனக் கமெண்ட் செய்துவருகின்றனர். 

You may have missed