கூவி கூவி காய்கறி விற்ற குட்டி தேவதை… சிறு வயதிலேயே உழைப்பின் பெருமையை உணரச் செய்த பிஞ்சு..!
கோபம், சிரிப்பு, வருத்தம் என எந்த ரியாக்ஷனைக் காட்டினாலும் அழகாகத் தெரிவது குழந்தைகள் மட்டும் தான் அதனால்தான் குழந்தைகள் என்றாலே நமக்கு ரசனைக்குரியவர்களாக இருக்கின்றார்கள். ஒரு கூடை நிறையப் பூக்கள் பூத்தாலும் ஒரு குழந்தையின் புன்னகைக்கு ஈடு ஆகாது என்று சொல்வதும் அதனால் தான்!
இங்கேயும் ஒரு குழந்தை தொடர்பான வீடியோ இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. சந்தையில் காய்கறி விற்கும் தன் அம்மா, ஒரு வேலையாக கொஞ்சம் வெளியில் செல்ல அதுவரை கடையைப் பார்த்துக்கொள்ளும் குட்டி தேவதை ஒன்று அந்த நேரத்தில் அழகாகக் கூவி, கூவி வியாபாரம் செய்கிறது. தக்காளி, வெங்காயம், காய்கறி..காய்கறி..கொத்தமல்லி என அந்தக்குழந்தை கூவக்கூவ கேட்கவே சங்கீதம் போல் இருக்கிறது.
அதிலும் அரசின் விதிகளை பின்பற்றி ஒழுங்காக மாஸ்க் மாட்டி அந்த குழந்தை விற்பது பார்ப்பதற்கே ரசனையூட்டுகிறது. வெறும் 20 நொடியில் இந்தக்காட்சி உழைப்பின் மேன்மையையும் நமக்கு உணர்த்திவிடுகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.