காமராஜர் பற்றி தெரியாத மறுபக்கம்.. முதன் முதலில் பகிர்ந்த காமராஜர் பேத்தி..!

  படிக்காத மேதை என கொண்டாடப்படுபவர்  முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்கள். அவர் காலம் தமிழகத்தின் பொற்காலம் எனச் சொல்லும் அளவுக்கு ஏராளமான அணைக்கட்டுகளைக் கொண்டு வந்தார். விவசாயம் அவரது ஆட்சியின் போது செழிப்பாக இருந்தது. எளிய மக்களுக்காக பல்வேறு நல்லதிட்டங்களையும் கொண்டு வந்தார் காமராஜர்

            முதல்வராக இருந்த போதும் எளிமையாய் வாழ்ந்த அவரது வாழ்க்கை இன்றைய அரசியல்வாதிகளுக்கெல்லாம் முன்னுதாரணம் விருதுப்பட்டியில் அவரது தாய் சாதாரணமாக வாழ்ந்ததும் நாம் அறிவோம். அந்தவகையில்  இன்றைய அரசியல்வாதிகளுக்கெல்லாம் முன்னுதாரணமாய் வாழ்ந்து மறைந்தார் காமராஜர். எளிய மக்களுக்கு சேவையாற்றியவர், அதற்கென தன் சொந்த வாழ்க்கையைக் கூட பார்த்துக் கொள்ளவில்லை. ஆம்…காமராஜர்திருமணம் செய்து கொள்ளாதவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏன் செய்து கொள்ளவில்லை என அவரே சொன்ன விளக்கம் தெரியுமா?

        ஒருசமயம் ராணி எலிசபெத் சிங்காரச் சென்னைக்கு வந்திருந்தார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராஜர் அவரை அரசு சார்பில் வரவேற்றார். அப்போது அவர் மனைவி, குழந்தைகள் எல்லாம் எங்கே? என பக்கத்தில் நின்றவரிடம் விசாரித்தார் ராணி எலிசபெத். அப்போது காமராஜர் பிரம்மச்சாரி,திருமணம் செய்து கொள்ளாதவர் எனத் தெரிய வந்தது. உடனே ராணி எலிசபெத் கர்மவீரர் காமராஜரிடம், ‘’நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?”என்று கேட்டாராம்.

      உடனே காமராஜர், ‘’என் நாட்டில் எத்தனையோ பெண்கள் இன்னும் திருமணம் செய்ய வசதியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சகோதிரிகள் திருமணம் முதலில் நடைபெற வேண்டாமா?”எனக் கேட்டார். 

  அப்படிப்பட்ட உயர்ந்த பண்புகொண்ட காமராஜர் அவர்கள் குறித்து அவரது உறவுக்காரப் பேத்தி  கமலிகா காமராஜர் மனம்விட்டுப் பகிர்ந்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “காமராஜர் பேத்தி என நான் பள்ளிப்பருவத்தில்கூட சொன்னது இல்லை. அவரது அம்மா சிவகாமி உள்பட தன் குடும்பம், அரசு சொகுசுகளை அனுபவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக நின்றவர் தாத்தா. அதைத்தான் வாரிசுகளான நாங்களும் பின்பற்றுகிறோம். பாட்டி சிவகாமி தாத்தா காமராஜரோடு இருக்க நல்ல ஆசைப்பட்டார். ஆனாலும் சிவகாமி பாட்டி சென்னை வந்ததுமே, ரிட்டன் டிக்கெட் எப்போது போடவேண்டும் என்றுதான் முதல்வராக இருந்த காமராஜர் கேட்பார். இதனாலேயே அவர்களுக்குள் சண்டைகூட வந்திருக்கிறது. 

    தாத்தா காமராஜருக்கு விரால் மீன் குழம்பு பிடிக்கும். என் தாத்தா அதை மெனக்கெட்டு காமராஜருக்கு சமைத்துக்கொண்டு கொடுப்பார். சாப்பிட்டுவிட்டு திருப்தியா உனக்கு? இனி இதையெல்லாம் எடுத்துகிட்டு வீட்டுப்பக்கம் வராதே என முகத்துக்கு நேராக சொல்வார் காமராஜர். அந்த அளவுக்கு கொள்கையில் நேர்மையானவர். தன் பெயரை சொந்தக்காரர்கள் கூட மிஸ் யூஸ் செய்துவிடக் கூடாது என நினைத்தவர் காமராஜர். என்பது உள்பட இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை கமலிகா காமராஜர் பகிர்ந்துள்ளார். இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்களேன். 

You may have missed