கணக்கு வாத்தியாராக பிறந்திருக்க வேண்டிய செல்ல பிராணி.. என்னா அறிவுப் பாருங்க இந்த நாய்க்கு..!

dog_maths_class

பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம். நாய்கள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கே ஒரு நாயின் கணித அறிவு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த நாய் என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

அந்த நாய்க்கு அபாரமான கணித அறிவு. அந்த நாயை வளர்ப்பவர் ஒன்று என சொன்னதும் அந்த நாய் ஒருமுறை குறைத்துக் காட்டுகிறது.தொடர்ந்து 2 என்றதும் இருமுறையும், மூன்று, நான்கு, ஐந்து என சொல்லச் சொல்ல அத்தனைமுறை குறைத்துக் காட்டி கணக்கில் அசத்துகிறது. இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.

You may have missed