இந்த மனசுதான் சார் கடவுள்.. நடுக்கடலில் மீனவர்கள் செய்த அந்த செயல்.. இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்..!
பைக், கார், ஆட்டோ, ரயில் இவ்வளவு ஏன் விமானப் பயணம் கூட பலரும் செய்திருப்போம். ஆனால் கப்பல் வழியான பயணம் அனைவருக்கும் வாய்ப்பது இல்லை.
கப்பல் பயணம் பலருக்கு இஷ்டமானதும் கூட… இவ்வளவு ஏன் கன்னியாகுமரி கடல்நடுவே விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்லலாம் என்பதற்காகவே கன்னியாகுமரிக்கு கிளம்பி வருபவர்களும் உண்டு. கடல் பயணம் அவ்வளவு சீக்கிரம் பலருக்கும் வாய்ப்பது இல்லை. அதிலும் இப்படியெல்லாம் கூட கப்பலில் இருக்குமா எனக் கேட்கும் அளவுக்கு பல விசயங்கள் கப்பலில் இருக்கும். கப்பல் மட்டுமா ஆச்சர்யம்? அது மிதந்து செல்லும் கடல் பேராச்சர்யம்!
கடலுக்குள் இருக்கும் அதிசயங்கள் கண்க்கில் அடங்காதவை. கடலுக்குள் செல்லும் வாய்ப்பு எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை. கடலுக்குள் செல்லும் போதே நம்மையும் அறியாமல் உற்சாகம் பிறக்கும். கடலுக்குள் என்னவெல்லாம் இருக்கிறது என்பதே நமக்குத் தெரியாது. கடலுக்குள் செல்வதே மீனவர்களுக்கு மட்டுமே வாய்த்த விசயம். இங்கேயும் அப்படித்தான். கடலுக்குள் மீனவர் ஒருவர் மீன்பிடிக்கச் சென்றிருந்தார். அப்போது மீனவர் ஒருவர் கடலுக்குள் தெர்மாகோலில் ஒரு ஆமை சிக்கியிருப்பதைப் பார்த்தார். உடனே, அதுகுறித்து மீன்வளத்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தார்.
உடனே அந்த மீனவரின் போட்டிலேயே அதிகாரிகளும், மீனவர்களுமாக கடலுக்குள் போய் தெர்மாகோலில் சிக்கிய கடல் ஆமையை மீட்டு மீண்டும் தண்ணீருக்குள் விட்டனர். மீனவரின் இந்த தரமான செயல் இணையத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்றுவருகிறது.