ஆழ்ந்த உறக்கத்தில் இந்த மாதிரி கனவுகள் வருகிறதா..? என்ன கனவுக்கு என்ன பலன் தெரியுமா..? உங்கள் கனவுக்கான பலன் இதோ…!

sleep_kanavu_nzz

தூக்கம் தான் இந்த உலகில் மிகப்பெரிய வரம். என்னதான் கோடி, கோடியாக பணம் இருந்தாலும் தூக்கம் வராமல் தவிப்பவர்கள் இங்கே பலர் உண்டு. தூக்கமாத்திரை போட்டால்தான் அவர்களுக்கு நித்திரை வரும். தூக்கம் அவ்வளவு விலைமதிப்புள்ளது. அந்தத் தூக்கத்தில் கனவு வராதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள்.

தூக்கத்தில் வருவதல்ல கனவு. நம்ம தூங்கவிடாமல் வருவதுதான் கனவு என்றார் அப்துல்கலாம். நம் ஆழ்மனக் கற்பனைகள் தான் கனவுகள் எனப்படுகிறது.அதேநேரம் நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் பலன் உண்டு. உங்கள் கனவில் ஒன்றுக்கு மேல் நட்சத்திரங்களைப் பார்த்தால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு.

உங்கள் கனவில் ஏழு வர்ணங்களுடன் வானவில் வந்தால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வும் தேடிவரும். இதேபோல் நிலவு கனவில் வந்தால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். இதேபோல் விவசாயி உழுவதைப் போல் கனவு வந்தால் சேமிப்பு பெருகும். பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு வந்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என அர்த்தம். அதே கனவு திருமணம் முடிந்தவருக்கு வந்தால் செல்வம் வந்துசேரும்.

இதேபோல் சிலருக்கு இறந்தவருடன் பேசுவது போல் கனவுவரும். அப்படி வந்தால் அதிகாரம், பதவி, லாபம் கூடிவரும். தெய்வம் கனவில் வந்தால் புதையல் கிடைக்கும் என அர்த்தம். நண்பன் இறந்ததாக கனவு வந்தால் அவருக்கு ஆயுள்கூடும். சின்ன குழந்தைகளை கனவில் கண்டால் நோயில் இருந்து பரிபூரண சுகம் கிடைக்கும். இறந்தவர்களின் சடலம் கனவில் வந்தால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். திருமண கோலம் கனவில் வந்தால் சமூக நன்மதிப்பு உயரும்.

இதேபோல் அடுப்பு சுவாலையுடன் எரிவதுபோல் கனவு வந்தால் தொழில் விருத்தி அடையும். இதேபோல் எலுமிச்சைப் பழம் காய்த்து தொங்குவதைப் போல் கனவு வந்தால் பண வரவு என அர்த்தம். குழந்தைகள் சேர்ந்து சிரித்து பேசி விளையாடி மகிழ்வது போல் கனவு வந்தால் சந்தோசம் நீடிக்கும் என அர்த்தம். சூரியன் கனவில் வந்தால் நம் வியாதிகள் நீங்கும். இதேபோல் கோயில் கனவில் வந்தால் தொழில் விருத்தி அடையும். குருவி வீட்டில் கூடு கட்டுவது போல் கனவு வந்தால் திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் கிட்டும். இதேபோல் தேள் கடிப்பது, பாம்பு கடிப்ப்து, கடலை தாண்டுவது. நெருப்பில் சிக்கிக் கொள்வது என என ரிஸ்கான லனவு வந்தால் தனலாபம் உண்டு. இப்போது என்ன கனவுக்கு என்ன அர்த்தம் எனத் தெரிந்து கொண்டீர்கள் தானே?

You may have missed