அச்சு அசலாக சிவகார்த்திகேயன் போல் இருக்கும் அவரின் மகன்… முதன் முதலாக இணையத்தில் வெளியான புகைப்படம்…..

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படமாகவே அமைகிறது. அதனால் முன்னணி ஹீரோக்கள் போல அதிக சம்பளத்தை பெற்று வருகிறார்.

இவர் நடிப்பில் வெளியான டாக்டர், டான் போன்ற படங்கள் வசூல் ரீதியாகவும் நல்ல ஹிட் அடித்தது. தற்போது இவர் பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அயலான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமும் ஆகியிருக்கிறார்.

இவருக்கு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும், குகன் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மகன் குகனின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. முதன் முதலாக மகனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அப்படியே அப்பா போலயே இருக்கிறார்.