25வயதுக்குள் இதையெல்லாம் அனுபவித்து விடுங்கள்… இன்றைய இளைஞர்கள் எதையெல்லாம் மிஸ் செய்யக் கூடாது தெரியுமா..!

  பொதுவாகவே மனித வாழ்க்கையில் இளமைப் பருவம் தான் மிகவும் முக்கியமானது. கவலையற்றது. நாம் விருப்பப்பட்டு அந்த வாழ்க்கையை வாழ்வதற்கான காலக்கட்டம் அது. ஆண்டு ஒன்று போனால் வயது ஒன்று கூடும் என்பார்கள். அதுபோல, வயது கூட, கூட நமக்கு பொறுப்பும் அதிகரித்துவிடும். அதனால் சில விசயங்களை நாம் நிச்சயமாகச் செய்துவிட வேண்டும். அதுகுறித்து இதில் பார்க்கலாம்..

  உடலினை உறுதி செய் என நம் முன்னோர்கள் சொல்வார்கள். அதற்கு அடித்தளமான வயது இருபது தான். நம் உடல் அந்த வயதில் ஆரோக்கியமாக இருப்பதனால் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் உடல் பற்றிய அக்கறை இன்றி இருப்போம். ஆனால் அப்படி இருக்கக் கூடாது. தினமும் உடல்பயிற்சி செய்ய வேண்டிய வயது இது.

  20 வயதில் தவறவே விடக்கூடாத இன்னொன்று தொலைதூரத் தனிமைப் பயணம். தனியாகவோ, நண்பர்களுடனோ டூவீலரில் பயணிப்பது நல்ல அனுபவமாக இருக்கும். இதேபோல் வருடத்திற்கு ஒருதடவையேனும் நண்பர்களுடன் மலையேற்றப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். படிப்பு, கல்வி என பிஸி செட்டியூலுக்கு மத்தியில் இது உலகை ரசனையோடு அணுகும் வித்தையையும் கற்றுத்தரும்.

   பயணம் செய்ய ஆசைதான். ஆனால் தமிழைத் தாண்டி வேறு மாநில மொழிகள் தெரியாது என்று ஒதுக்கக்கூடாது. இருபதுக்கும், முப்பதுக்கும் இடையே இளமைத்  துடிப்பும், ஆர்வமும் அதிகமாக இருக்கும். இதனால் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளமுடியும். இதனால் சிறகை விரித்துக்கொண்டு பயணியுங்கள். உங்களுக்கு முளைக்கும் இறக்கை, உங்கள் எல்லைகளைக் கடந்து சாதிக்க வைக்கும். 

  மறக்காமல் இதையெல்லாம் செய்துபாருங்கள் யூத்களே!…

You may have missed