கோலிவுட், பாலிவுட்டெல்லாம் தாண்டி ஹாலிவுட்டில் களமிறங்கும் யோகிபாபு…

தமிழ் திரைஉலகி 2009 ஆம் ஆண்டு யோகி என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தான் பாபு என்கிறவர். இப்படத்தை தொடர்ந்து தான் இவருக்கு யோகி பாபு என்று பெயர் வந்தது.இதை தொடர்ந்து பையா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இப்படி தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்து விட்டார்.

இவரின் நகைச்சுவை திறமை மிகவும் மாறுபட்டதாகவே இருக்கும்.இவரின் விகாரமான முகத்தையே இவர் பிளஸ் பாயிண்ட்டாக எடுத்து வாழ்வில் சிறிது சிறிதாக முன்னேறி கொண்டுள்ளார். இவரின் தனி திறமை மூலம் தமிழ் சினிமாத்துறையை திரும்பி பார்க்க வைத்தது மட்டுமில்லாமல், தற்போது இவர் ஹாலிவுட் நோக்கி சென்றுள்ளார்.

திருச்சியை சேர்ந்த டெல் கணேசன் என்னும் இயக்குனர் இயக்கும் ஹாலிவுட் படமான ட்ராப் சிட்டி படத்தில் நடிக்க உள்ளார். நெப்போலியன், ஜி.வி.பிரகாஷ், பிராண்டன் டி.ஜாக்சன், ஜே.ஜீஸி ஜென்கின்ஸ் போன்றோர் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். இப்படத்தின் மூலமாகவே ஜீவி.பிரகாஷும் ஹாலிவுட்டில் இசையமைக்க போகிறார்.வருகின்ற டிசம்பர் 13 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஹாலிவுட்டில் கலக்கும் யோகிபாபுவின் நடிப்பை பார்க்க ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர்.
