ஷூட்டிங் ஸ்பாட்டில் தல அஜித்துடன் விளையாடிக்கொண்டிருந்த காமெடி ஸ்டார் யோகிபாபு… வைரலாகும் வீடியோ…

தமிழ் திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் தான் தல அஜித் அவர்கள். இவர் தற்போது இரு படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி பட ஷூட்டிங் நடந்து முடிந்த நிலையில் தற்போது குட் பேட் அக்லீ படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வப்பொழுது பட ஷூட்டிங்கில் இருந்து சில வீடியோ வெளிவருவது இயல்புதான்.

இப்படம் பொங்கலுக்கு வெளிவரும் என படக்குழுவினர் கூறி இருந்தார்கள். இப்படத்தில் இசையமைக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் அவர்கள் படத்தை விட்டு நீங்கிய நிலையில் இப்படத்தில் இசையமைக்க தற்போது ஜீ.வி.பிரகாஷ் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்.

இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது யோகி பாபு அவர்கள் தனது எக்ஸ் தளத்தில் தல அஜித் அவர்களுடன் விளையாடி கொண்டிருந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
