பாலிவுட் கோலிவுட்ன்னு கலக்கும் நடிகை தான் இந்த குழந்தை… யார் என்று அடையாளம் தெரிகிறதா..??

தற்போது பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி வெளிவந்து வைரலாகி வருகிறது.அந்தவகையில நேற்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் தங்களின் சிறு வயது புகைப்படங்களை வெளியீட்டு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதில் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் ஒரு நடிகையின் சிறுவயது புகைபடம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த குழந்தை வேற யாரும் இல்லை. தமிழ் திரை உலகில் பீஸ்ட் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான பூஜா ஹெக்டே தான்.

இவர் முதலில் தமிழில் ஜீவாவுடன் முகமூடி என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரிதளவு வெற்றியை கொடுக்கவில்லை இவருக்கு. அதைத்தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்து அதன் பின் தமிழில் வந்து விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார்.இப்படம் இவருக்கு பயங்கர வெற்றியை கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
