இவர்களுக்கெல்லாம் பட்டம் தேவையா..?? நடிப்பது அவர்களின் வேலை… தயாரிப்பாளர் பாலாஜி பிரபுவின் ஆவேசப்பேச்சு…

நம் தமிழ் சினிமா மட்டுமில்லாமல் கன்னடம் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலுமே அருமையாக நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு அவர்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு பட்டன்கள் வழங்குவது இயல்புதான்.ஆனால் இப்படியெல்லாம் பாட்டம் கொடுக்க தேவை ஒன்றும் இல்லை என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அவர்கள் ஆவேசமாக பேசிய வீடியோ ஒன்று வெளிவந்து சர்ச்சையை கிளப்பி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது, கர்நாடகாவில் இருந்து வந்தா கன்னட பைங்கிளி என்றும் கேரளாவிலோ இருந்து வந்தா பசுங்கியா முதல்ல யாருக்கும் பட்டமே தேவை இல்ல என ஆரம்பித்து பவர் ஸ்டார் பட்டம் சீனிவாசனுக்கு கொடுத்திருக்காங்க அவர் ஒரு குணச்சித்திர நடிகர் அவரை அனைவருக்கும் தெரிய வாய்ப்பில்லை அதனால அவரை அறிமுகம் செய்யும் விதமாக கொடுக்கலாம்.ஆனால் விஜய்க்கு எதற்கு தளபதி பட்டம் அவர் இளையதளபதி பட்டத்தை மாற்றி தளபதி பட்டத்தை வைத்துக்கொண்டால் மட்டும் அவருக்கு மெட்சுரிட்டி வந்துட்டுன்னு அர்த்தமா என்று கேட்டுள்ளார்.

பின் ரஜினிகாந்தை பார்த்து இவருக்கு இத்தனை வயது ஆனா பிறகு கூட இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை விட்டு கொடுக்க தோனவில்லை.அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்னு சொன்ன உடனே காக்க கழுகு கதையெல்லாம் சொல்லறாரு,அடுத்து அஜித் சார் முதலுல தல பட்டத்தை வேண்டாம்னு தான் சொன்னாரு அப்புறம் அவரும் அதை அனுபவிக்க ஆரம்பிச்சிட்டாரு.அப்றம் கமல்காசன் அவர்கள் இத்தனை வயது பின் தான் அறிவு வந்து உலக நாயகன் பட்டத்தையே வேணாம்னு சொல்லிருக்காரு என்று அனைத்து நடிகர்களையும் பற்றி ஆவேசமாக பேசியிருக்கிறார். தற்போது இந்த காணொலி மக்கள் மத்தியில் பரவி வருகிறது.
pic1

pic2

pic3
