அமரன் பட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டிய TVK தலைவர் விஜய்…

தீபாவளியன்று வெளியாகி இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் அமரன்.இப்படத்தின் கதை முழுவதுமே ஒரு இராணுவ அதிகாரியின் வாழ்க்கை சூழலை எடுத்து காட்டும் விதமாகவே இருக்கும்.இப்படத்தின் கதை நிஜத்தில் நடந்த மேஜர் முகுந்த் அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பதாலே படம் பயங்கரமாக ஹிட் அடித்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி அவர்கள் நாயகன், நாயகியாக நடித்திருப்பார்கள்.300 கோடி மேல் வசூல் பெற்று சாதனை படைத்த இப்படம் சிவகார்த்திகேயன் கேரியரில் மிக முக்கியமான படம் ஆகும். இப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் நன்றாக வாழ்ந்துள்ளனர். தமிழகத்தின் முதல்வர் அவர்களும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிருப்பார்.

அந்தவகையில் TVK தலைவர் மற்றும் நடிகருமான விஜய் அவர்கள் பட இயக்குனரான ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.மேலும் இவர்கள் இருவரும் இணைந்து புகைப்படங்களை எடுத்துள்ளனர். இதை ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் 12 வருடத்திற்கு முன் விஜயுடன் எடுத்த போட்டோவுடன் இணைத்து 12 வருடம், 2 மாதம், 1 நாள், 15 மணி நேரம் கழித்து விஜய் உடன் மீண்டும் போட்டோ எடுத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
