மகனின் கட்சி மாநாடை பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளர்கள்.. கேலி செய்த SAC…

தமிழ் திரையுலகில் தளபதி என்ற பட்டத்துடன் வலம் வருபவர் தான் விஜய் அவர்கள்.அவர் தற்பொழுது கட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்.சில வருடங்களாகவே தொடங்கலாம் என பேசப்பட்ட கட்சி சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டது.இதை தொடர்ந்து கட்சியின் கொடியையும் வெளியிட்டார்கள்.

இதையடுத்து அவரின் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் சென்னையில் கன மழை பெய்த காரணத்தினால் மாநாடு எப்போது என்று தெளிவாக கூறவில்லை.இதைத்தொடர்ந்து விஜயின் கோட் படத்தை பார்ப்பதற்கு வெங்கட்பிரபுவுடன் இணைந்து விஜயின் தந்தையான SAC அவர்கள் சென்றிருந்தார்.

அங்கே அவரிடம் ஓடி வந்த பத்திரிகையாளர்கள் விஜயின் தமிழக வெற்றி கழக மாநாடை பற்றி கேட்டுள்ளார்கள்.அதற்கு SAC அவர்கள் ஓ மாநாடு படமா அதை எடுத்தவர் இவர்தான் என வெங்கட்பிரபுவை கை காண்பித்து விட்டு நக்கலாக சிரித்து கொண்டு தள்ளி சென்றுள்ளார்.இதை பார்த்த ரசிகர்கள் சில ஆண்டுகளா விஜய்க்கும் அவரது அப்பாவிற்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அதை உறுதி படுத்தும் வகையில் அவர் பேசியுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.