அநாகரீக அரசியலோ,பிறரை தாக்கி பேசும் அரசியலோ வேண்டாம்…அதற்காக நான் யாருக்கும் ஒரு போதும் பயப்படவில்லை, பயப்படவும் மாட்டேன்…TVK விஜயின்ஆதங்கபேச்சு…

சினிமாவில் வெற்றி கண்டு கொண்டிருந்த தளபதி விஜய் அவர்கள் தற்போது இரு வருடங்களாக அரசியலில் ஈடுபடப்போவதாக தகவல் வெளிவந்திருந்தது. அதேபோலவே தளபதி விஜய் அவர்கள் TVK என்ற கட்சியை தொடங்கி சில மாதங்கள் முன் கட்சி கொடியையும் அறிவித்தார். விஜய் மக்கள் இயக்கம் மூலம் மக்களுக்கு ஆதரவாக இருந்த விஜய் அவர்கள் இன்று சினிமாவை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட ரசிகர்கள் மற்றும் மக்களுக்காக வந்துள்ளார்.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி ஏரியாவில் நேற்று TVK முதல் மாநாடு மிக கோலாகலமாக நடைபெற்றது. அதில் விஜய் அவர்களின் பேச்சு மிகவும் வீரமாகவும் அனைவரையும் அடித்து தாக்குவது போலவும் இருந்தது.முதல் மாநாட்டை விழுப்புரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடித்த விஜய் அவர்கள் இதைத்தொடர்ந்து அடுத்த பிரமாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதில் அவர் நான் யாரையும் தாக்கி பேச விரும்பவில்லை யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை அதற்காக நான் அவர்களுக்கு பயந்ததாக அர்த்தம் இல்லை நான் நாகரிக அரசியல் நடத்த விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.