ஸ்கூல் படிக்கிற பொண்ணு இல்ல நான்.. பிக்பாஸ் மேடையில் வயதை போட்டுடைத்த மகாராஜா பட நடிகை…

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் BB-8 நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் இரண்டாவது போட்டியாளராக வந்தவர் சாச்சனா. இவர் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக வந்தவர். இவர் மேடையில் ஏறி பேசியவுடன் விஜய் சேதுபதி அவர்கள் நீ யாரை கேட்டு கொண்டு இங்கே வந்தாய் ஏன் வந்தாய் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பின் அறிவுரை பல மேடையில் வழங்கியுள்ளார். பின் நீ என்னை அப்பா என்றே கூப்பிடலாம் உன் விருப்பம். ஆனால் வார இறுதியில் வந்து அப்பா தெரியாம செய்து விட்டேன் சாரி என்றெல்லாம் கேக்க கூடாது என்று கூறியுள்ளார்.

அதற்கு சாச்சனா சிரித்துக்கொண்டே தலையாட்டிவிட்டு நான் சின்ன பொண்ணு இல்லை எனக்கு வயது 21 ஆகிறது எனக் கூறியுள்ளார்.இதை கேட்ட சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் பார்த்துள்ளனர்.