ரஜினிக்கும் பகத் பாசில்க்கும் இடையில் உள்ள செம சீன்ஸ்…! வேட்டையன் படத்தில் ரிமூவ் செய்யப்பட்ட சீன்கள்…! வெளியானது….

தமிழ் சினிமாவில் முன்னனி பிரபலமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் தான் வேட்டையன். அந்த படம் கடந்த 10 ம் தேதி வெளிவந்தது. டி ஜே ஞானவேல் இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் அமிதாப்பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் என பல பிரபலங்கள் நடித்துள்ளன. சூப்பர்ஸ்டாரின் ஜெயிலர் படத்திற்கு பிறகு இந்த படத்திற்கும் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் ஜெயிலர் படத்தை போலவே இந்த படத்திலும் பல பிரபலங்கள் நடித்துள்ளன.

அனிரூத் இசை அமைத்துள்ள இந்த படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. சூப்பர்ஸ்டாரின் ரசிகர்கள் இந்த படத்தினை காண்பதற்கு மிகவும் ஆரவாரத்துடன் இருந்தனர் . மேலும் ரசிகர்கள் படத்தினை மிக விமர்சையாக பாராட்டி வருகின்றனர். மேலும் வெளியாகி 5 நாட்களிலே இந்த படம் ரூபாய் 250 கோடி வசூலை பெற்றுள்ளதாக உத்தேசமாக கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது இந்த படத்தில் இருந்து நீக்கப்படுள்ள காட்சிகளை இப்பொது பட குழு வெளியிட்டுள்ளது.

அதில் ஒரு சீன் ஆக ரஜினியும் பகத் பாசிலும் உரையாடி வரும் சீன் உள்ளது. இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் இந்த காட்சிகள் நல்லா இருக்கிறது எனவும் இவர்களின் காம்போ படத்தில் நல்லா இருக்கிறது எனவும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது.