முதல் நாளிலே வசூல் வேட்டையில் தெறிக்கவிட்ட சூர்யாவின் கங்குவா…

1997ல் நேருக்கு நேர் படத்தில் அறிமுகம் ஆகி இன்று தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய பிரபலமாக இருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் அந்தக்காலத்து நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகன். சாந்தமாகவும் பொறுமையான குணங்களில் வந்துகொண்டிருந்த சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது காக்க காக்க படம் தான்.

இவர் தனது சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இவர் பல படங்கள் வெற்றியை கொடுத்து வருகிறார். தற்போது இவரின் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் பல விருதுகளை பெற்றது. இந்நிலையில் நேற்று இவரின் நடிப்பில் சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் கங்குவா திரைப்படம் வெளிவந்துள்ளது.

நேற்று வெளியான இப்படம் முதல் நாளிலே உலகளவில் 50 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலே இவ்வளவு வசூல் என்றால் இனிவரும் நாள்கள் இதையே தொடரும் என எதிர்பார்க்கபட்டு வருகிறது.
