திருமண கொண்டாட்ட சந்தோஷத்தில் நடனமாடிய சிறகடிக்க ஆசை தொடர் நாயகன் வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவி…

விஜய் டிவி சீரியலில் டிஆர்பி-யில் முதல் இடத்தை பிடித்த சீரியல் தான் சிறகடிக்க ஆசை. அதில் ஹீரோவாக நடித்து வரும் முத்துவின் உண்மையான பெயர் வெற்றி வசந்த். இவர் அவரின் எதார்த்த நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர். இந்த சீரியலில் வரும் அனைத்து நடிகர்களும் தனது நடிப்பு திறமையை மிக அழகாக காட்டியிருப்பார்கள்.

இதில் முத்து இடையில் நான் காதலிக்குறேன் என்று வீடியோ வெளியிட்டு அந்த பெண் பொன்னி சீரியல் ஹீரோயின் வைஷ்ணவி தான் என அறிமுகம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து திருமணத்தை உறுதி செய்யும் விதமாக நிச்சதார்தத்தை உடனே வைத்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்கள். இவர்களின் திருமண நவம்பவர் 28 ல்நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இவர்களின் ப்ரீ வெட்டிங் சுட மிகவும் சிறப்பாக நடந்துள்ளது. இதனை வெற்றி வசந்த் அவர்கள் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குறுகிய காலத்தில் காதலித்து உடனே திருமணம் செய்யும் நடிகர் என்றால் அது இவர்தான் எனவும் மேலும் இவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
