சினிமாவை போல செட் போட்டு தங்கத்தில் மாலை அணிந்து திருநெல்வேலி மக்களை திரும்பி பார்க்க வைத்த நடிகர் வேலராம மூர்த்தியின் பேத்தி திருமணம்…
நடிகர் மற்றும் எழுத்தாளராக இருக்கும் வேலராம மூர்த்தியின் திருமண விழா பற்றித்தான் இப்பொது சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த அளவு கோலாகலமாக இந்திய முழுவதுமே திரும்பி பார்க்கவைத்துவிட்டார் வேலராம மூர்த்தி. திருநெல்வேலி மக்கள் அனைவரும் அசரும் விதமாக இவர் அவரின் பேத்தி திருமணத்தை நடத்தியுள்ளார்.
திரைப்படங்களில் விளனாகவு குணச்சித்திர நடிகராகவும் நடித்து கொண்டே எழுத்தாளராகவும் பணியாற்றுபவர் தான் நடிகர் வேலராம மூர்த்தி. இவரின் பேத்தி திருமணம் தற்போது நடந்துள்ளது.இதில் அவர் தங்கத்தில் மாலை அணிந்தும், சுமார் 8லட்சம் மதிப்புள்ள புடவை அணிந்தும், 300 சவரன் நகை போட்டும் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் சினிமா பாணியில் மண்டபத்தை செட் போட்டு பாடிகார்ட்ல்லாம் வைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர். சாப்பாடு மட்டுமே செஃப் மாதம்பட்டி ரங்கராஜன் வைத்து மிக அருமையாக நடத்தியுள்ளனர். தற்போது இவர்களின் திருமணத்தை பற்றி தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.