BB வீட்டில் இருந்து மூன்று வாரங்களில் வெளியேறிய வர்ஷினி… 3 வாரங்களில் இவ்வளவு சம்பளம் வாங்கினாரா..!!

விஜய் டீவியில் செப்டம்பர் மாத இறுதியில் கோலாகலமாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் பிபி-8. இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வருகிறார். இதில் போட்டியாளராக 18 நபர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது எலிமினேஷன் மூலம் ஒவ்வொரு நபர்களாக வெளியேறி உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியே சென்றனர். நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வர்ஷினி வெங்கட், ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகிய 6 பேர் உள்ளெ வந்தனர். இந்த ஏழாவது வார நாமினேட்டில் முத்து, வர்ஷினி, அருண், ராணவ், சிவா, விஷால், சாச்சனா, சௌந்தர்யா போன்றோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால் இதில் எலிமினேட் ஆனது வர்ஷினி தான்.இந்நிலையில் இவர் BB வீட்டிற்குள் இருப்பதற்கு வாங்கிய சம்பளம் கசிந்துள்ளது. அதன்படி பார்க்கையில் வர்ஷினி அவர்கள் ஒரு நாளைக்கு 12000 என்று 21 நாளைக்கு 2லட்சத்து 52ஆயிரம் வாங்கியதாக தகவல் வந்துள்ளது.

You may have missed