பல இசை அமைப்பாளர்களால் ஒதுக்கப்பட்ட வைரமுத்துவின் வரிகள் … 12 வருடம் கழித்து ஏ.ஆர். ரகுமானால் ஹிட்…

கவிதையும் இசையும் பின்னிப்பிணைவதே பாடலாக உருவெடுக்கிறது . அன்று கவிதை என்றால் சுத்த தமிழிலே எழுத வேண்டியிருந்தது . ஆனால் இன்றோ ஹைக்கூ கவிதை வர வந்து உள்ளது.
இதனால் யார்வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் எனும் நிலை வந்தது. அதை இசை அமைத்து பாடல் போடுவதுதான் கடினம். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து அவர்கள் நான் ஒரு பாடலை 12 வருடம் கையில் வைத்திருந்தேன் . அதைப் பல இசையமைப்பாளர்களிடம் கொடுத்தேன் அவர்கள் என் கவிதையை திருப்பி அனுப்பி விடுவார்கள் .

அதில் எம்.எஸ். விஸ்வநாதன் , ஷங்கர் கணேஷ், ஷியாமு , ஹம்ஷலேகா குறிப்பிடத்தக்கவர்கள் என கூறியுள்ளார் . பின் ஒரு தினம் சுரேஷ் மேனனின் புதிய முகம் படத்திற்கு அவசரமாக பாட்டு வேண்டும் என்று கேட்டிருந்தார் .
உடனே நான் என் சட்டைப் பையில் இருந்த இந்த கவிதையை எடுத்து கொடுத்த 10-ஏ நிமிடத்தில் ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசை அமைத்து பாடி அசத்தினார் என கூறினார் .

அந்தப் பாட்டு தான் அனைத்து தாய்மார்களும் தன் பச்சிளங் குழந்தைகளுக்காக பாடும் “கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு” பாடல் ஆகும் .