80’ஸ்களில் நடித்த இந்த நடிகையை நியாபகம் இருக்கிறதா..? தற்போது எப்படி இருக்காங்க பாருங்க..!


பழம் பெரும் நடிகைகளில் சவுகார் ஜானகி அவர் நடித்த கதாபாத்திரகளின் மூலம் அறியப்படுகிறார். பதினாறு வயதில் நடிக்க வந்த இவர் மூன்று முதலமைச்சர்களுடன் நடித்த நாயகி. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ,முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா, முன்னால் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆர் இவர்களுடன் நடித்துள்ளார். மேலும், நடிகர் திலகம் சிவாஜி கணேஷன், ஜெமினிகணேசன், ரஜினி, கமல் என முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது கலை சேவையை பாராட்டி இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழக்கப்பட்டுள்ளது. இவரது பேத்தி வைஷ்ணவியும் நடிகை ஆவார்.

வைஷ்ணவி 1987-ம் ஆண்டு தலைவனுக்கோர் தலைவி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். கண்ணியமான தோற்றத்தில் கதாநாயகனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருந்தும் நடிகையாக நடித்திருப்பார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார். பிரபல நடிகைகளுக்கு பின்னனி குரல் கொடுத்துள்ளார். மேலும் நாடக கலைஞர், இவர் இயற்றிய லட்சுமி கல்யாண வைபோகமே நாடகம் 100 முறை மேடையில் அமெரிக்க, லண்டன், பாரிஸ், இலங்கை, தாய்லாந்த் போன்ற நாடுகளிலும் மற்றும் இந்தியாவிலும் காட்சிப்படுத்தியுள்ளார். 1996-ம் ஆண்டு அரவிந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விடைபெற்றார்.

பின்னனி குரல் நடிகை கௌதமி, அனு அகர்வால் போன்றவர்களின் படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகர் மாதவன் கேட்டு கொண்டற்கினங்க அவரது இயக்கத்தில், தயாரிப்பில், நடித்து வெளிவந்த ராக்கெட்ரி திரைப்படத்தில் நடிகை சிம்ரனுக்கு பின்னனி குரல் கொடுத்து சினிமாவில் 2-வது முறையாக நுழைந்துள்ளார். இவரது 2-வது இன்னிங்க்ஸை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். சமீபத்தில் அவருடைய புகைப்படம் மற்றும் அவரது இரு மகள்கள்,, தாய், பாட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. நான்கு தலைமுறையினரின் குடும்ப புகைப்படத்தை பார்த்து இணையவாசிகள் அதிசயித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இங்கே காணலாம்..
pic1

pic2
