இளைஞர்களை கவர்ந்திழுக்கும் தமிழக வெற்றிக்கழக கட்சி… புதிதாக TVK கட்சியில் இணைந்த இளம் நடிகர்…
சினிமாவில் இருந்து பிரபலங்கள் அரசியலுக்குள் வருவது காலங்காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென்று பட வாய்ப்பையெல்லாம் உதறி விட்டுவிட்டு தற்போது அரசியல் நோக்கி வந்துள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னால் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி அதற்கென ஒரு கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். கடந்த செப்டம்பர் 5ல் கட்சியின் முதல் மாநாடு கோலாகலமாக நடந்தது.
இதைத்தொடர்ந்து பல கட்சியினர் இவரை விமர்சித்து வந்தாலும். இவரின் அனல் பறக்கும் பேச்சால் கவர்பட்டவர்கள் அதிகம் இளைஞர்களே. TVK கட்சியில் அதிகம் உறுப்பினராக இருப்பவர்கள் இளைஞகள் தான். இந்த மாநாட்டில் விஜய் இசைவெளியீட்டு விழாவில் குட்டி கதை சொல்வது போலவே கதையெல்லாம் சொல்லிருந்தார்.அரசியலுக்கு நான் குழந்தை ஆனாலும் பாம்பை கண்டு அஞ்சமாட்டேனென்று அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகி வசூலில் தெறிக்கவிட்ட படமான வாழை படத்தில் சிவானந்தன் கதாபாத்திரத்தில் நடித்த இளைஞர் பொன்வேல் அவர்கள் தற்போது விஜய் அவர்களின் TVK கட்சியில் உறுப்பினராக இணைந்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்னும் பல இளைஞர்கள் கட்சியில் இணைவார்கள் என மக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.