உலக அழகியின் சாயலை உரித்து வைத்திருக்கும் பெண்மணி…புகைப்படம் பார்த்து வியந்து போன ரசிகர்கள்..!!

ஹிந்தி நடிகையான ஐஸ்வர்யா ராய் அவர்கள் தமிழிலும் அதிக படங்களை நடித்துள்ளார்.அத்துடன் வெற்றியும் கொடுத்துள்ளார்.இவர் 1994ல் உலக அழகி பட்டம் பெற்றவர்.அதைத்தொடர்ந்து பலர் இப்பட்டங்களை பெற்றிருந்தாலும் ஐஸ்வர்யா ராயின் பேரையும் புகழையும் யாரும் இன்னும் அடையவில்லை என சொல்லலாம்.

இவர் 50 வயது ஆகினும் இன்றும் இளமையுடனே காணப்படுகிறார்.தற்போது இவர் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் வந்திருந்தாலும் மக்கள் மனதில் ஒரு நல்ல இடத்தையே பிடித்தார்.அன்றும் இன்றும் என்றும் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.இவர் 2007ல் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்து கரம் பிடித்தார்.

இவர்களுக்கு ஆராத்யா என்று ஒரு பெண் குழந்தையும் உள்ளார்.
இந்நிலையில் தற்போது இவரை போன்று ஒரு பெண்மணி இருப்பதாக தகவல் வெளியாகியது.அந்த புகைபடம் இணையத்தில் பரவி வருகிறது.அப்பெண்மணி ஒரு தொழிலதிபர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த கன்வால் சீமா என்பதும் தெரியவந்தது. இவர் மை இம்பேக்ட் மீட்டர் என்ற டிஜிட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.இவரின் மூக்கு முதல் கண்கள் வரை ஐஸ்வர்யா ராய் போன்று இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.