துணை முதலமைச்சராக பதவியேற்றார் உதயநிதி… சினிமா நட்சத்திரங்களிடமிருந்து தொடரும் வாழ்த்து…..

ஆதவன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின் ‘ஓகே ஓகே’ படம் மூலம் வெற்றி கொடுத்தவர்தான் முதலமைச்சர் மு.கா.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின். இதைதொடர்ந்து வரிசையாக நடித்த படங்கள் தோல்வி கொடுத்த நிலையிலும் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மீண்டும் நடித்து நிமிர், கண்ணே கலைமானே, மனிதன், கலகத்தலைவன் போன்ற படத்தின் மூலம் வெற்றி கொடுத்தார் .

சினிமாவில் இருந்த நிலையிலும் தனது தந்தையுடன் அரசியல் பணியையும் ஆற்றி அமைச்சராக இருந்தார். இந்நிலையில் சினிமாவில் இருந்து ஒதுங்கி அரசியலில் முழு கவனத்தை செலுத்த போவதாக கூறி இருந்தார். இருப்பினும் தனது இறுதி படமாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் யாரும் கூறாத அரசியலின் தீவிரத்தை பற்றி கூறி பெரும் வெற்றியை கொடுத்தார்.

அமைச்சராக இருந்த நிலையில் கட்சி தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். எதிர் கட்சியினர் வழக்கம்போல் ‘வாரிசு அரசியல்’ என்று விமர்சிக்கும் நிலையிலும் திமுகவினர் மிகவும் சந்தோசத்தில் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சினிமா நட்சத்திரங்கள் பலரும் கூறி வாழ்த்துக்கள் வருகின்றனர் . இதனடிப்படையில் ஜெயம் ரவி தனது எக்ஸ் பக்கத்தில் உதயநிதி பிரதர் உங்கள் ‘தலைமைபண்பு இளைஞர்களின் வளர்ச்சி’ எனவும், நடிகர் சிம்பு தனது எக்ஸ் பக்கத்தில் உங்கள் ‘சாதனை தொடரட்டும்’ எனவும், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ‘வாழ்த்துக்கள் உதயநிதி சார்’ எனவும் நடிகர் சந்தானம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் முதலாளி’ எனவும், நடிகர் SK துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் எனவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு நீங்கள் துணை முதலமைச்சராகவும் தலைவராகவும் மக்களுக்கு பல நன்மைகள் செய்வீர்கள் என பாராட்டியுள்ளார்.