துப்பறிவாளன் 2-வில் இருந்து விலகிய மிஸ்கின்… விஷால் என்னை அசிங்கப்படுத்திட்டாரு… மனம்திறந்து பேசிய இயக்குனர் மிஸ்கின்…

கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குனர் மிஸ்கின் அவர்களின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துப்பறிவாளன்.இப்படத்தில் ஆண்ட்ரியா, வினய், பாக்கியராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் வந்திருந்தனர். இதில் சிம்ரன் அவர்கள் கெளரவ வேடத்தில் நடித்திருப்பார்.இப்படம் வசூல் ரீதியா ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது எனலாம்.

இப்படத்தின் வெற்றியால் இது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டது. இதன் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் தயாரிக்கப்பட்டு வந்தது. ஆனால் சில பல காரணங்களால் படம் எடுக்கமுடியாமல் பாதியிலே நின்றது.இதைப்பற்றி இயக்குனர் மிஸ்கின் அவர்கள் பேசுகையில் கூறியதாவது,விஷால் என் உதவியாளர்களை மிகவும் மோசமாக் நடத்தினார்.

மேலும் என்னுடைய மேலாளரையும் மிக தரக்குறைவாக நடத்தினார்.இதனால் நான் கோபமடைந்து படம் பண்ண மாட்டேன் என்று கூறியபோது உங்களுக்கு நன் முக்கியமா இல்லை அவர்கள் முக்கியமா என்று கேக்கவே நான் என் உதவியாளர்கள் தான் முக்கியம் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன் எனவும் கூறியுள்ளார்.

இதனால் விஷால் படத்தை இயக்குவதாக முடிவெடுத்தள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதம் ஆரம்பிக்க இருப்பதாக கூறியுள்ளார். படத்தில் பிரசன்னா முக்கிய வேடத்தில் வருவதாகவும் தெரிவித்துள்ளார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என ஒரே படத்தில் அவதாரம் விஷால் எடுப்பதால் இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

You may have missed