குழந்தையுடன் கியூட் ஆக மலையுச்சியில் திரிஷா… வைரல் ஆகும் போட்டோஸ்…

மஞ்சள் நிற சாரி என்றாலே அம்மனை தான் குறிக்கும் ஆனால் அதை மாற்றி மஞ்சள் சாரி என்றல் திரிஷாவை நினைவுபடுத்தும் வகையில் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி கலக்கியவர் தான் எவர்க்ரீன் த்ரிஷா.இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் இளசுகளின் மனதில் கனவுக்கன்னியாக இருப்பவர்.

கிட்டத்தட்ட 15 வருடத்திற்கு மேல் தமிழ் சினிமாத்துறையில் ஹெராயின் ஆக நிலைத்து நிற்கிறார் இவர்.தற்பொழுது இவரின் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் லியோ போன்ற அனைத்து படங்களுமே வெற்றியை கொடுத்தது.இதனை தொடர்ந்து இவர்க்கு குவிந்து கொண்டிருக்கிறது பட வாய்ப்புகள்.ஆனால் இவர் சுற்றுலா சென்று போட்டோ எடுத்து போடுவதையே வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது இவர் மலையுச்சியில் நின்றவாறு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதில் அவருடன் ஒரு அழகான குழந்தையும் இருந்தது.இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தையுடன் அழகாக ஜொலிக்கும் த்ரிஷா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
