இந்த வாரம் OTT தளத்தில் வெளியாகும் 3 அசத்தல் படங்கள்…
ஒரு வாரத்தின் வெள்ளிக்கிழமை ஆனால் படங்கள் திரையரங்கில் வருவது இயல்புதான். அதேபோல் வார இறுதி ஆனால் ஏதாவது படங்கள் OTT தளத்தில் கட்டாயமாக வெளிவரும் அதே போல் இந்த வார இறுதியில் 3 படங்கள் OTT தளத்தில் வெளிவர உள்ளது.
இதில் முதலில் தெலுங்கு படமான மட்கா. இப்படத்தில் வருண் தேஜ் அவர்கள் கதாநாயகனாக நடித்து அசத்தியுள்ளார். கருணா குமார் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் அமேசான் தளத்தில் வெளிவர உள்ளது. இதைத்தொடர்ந்து விமல் நடிப்பில் வெளிவந்த சார் படம்.
இப்படம் முழுக்க முழுக்க கல்வியின் மகத்துவத்தை குறிக்குமாறு வந்த ஒரு படமாகும். இப்படத்தை போஸ் வெங்கட் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படமும் அமேசான் தளத்தில் வெளிவர உள்ளது. இதையடுத்து பாலிவுட் நடிகையான ஆலியா பேட் நடிப்பில் வெளிவந்த ஜிக்ரா. இப்படத்தை வாசன் பாலா இயக்கியுள்ளார். இப்படம் நெட்ப்ளிக்சில் வெளிவர உள்ளது.