இந்த பூவெல்லாம் வீட்டில் இருந்தால் இவ்வளவு நன்மையா..!! தடைகளை உடைத்து வெற்றி பெற வைக்கும் பூக்கள்…

சில பூக்கள் வீட்டினுள் இருந்தாலோ அல்லது வீட்டில் அந்த செடியை வளர்த்தாலோ வீட்டில் இருக்கும் கேடுகள் நீங்கி நன்மை பிறக்கும் மற்றும் தடைகளை உடைத்து வெற்றி பெறலாம் என சொல்லப்படுகிறது.

அதில் முதலாவதாக லாவெண்டர் பூக்களின் இனிமையான வாசனை மற்றும் அதன் மேன்மையான பண்புகளை குறிக்கிறது.இவ்வகையான பூக்கள் வீட்டில் இருந்தால் மிக அமைதியான சூழல் வீதி இருக்கும்.மேலும் இவ்வகையான பூக்கள் நம் மன அழுத்தத்தை குறைக்கும்.

இதனடுத்து ரோஜா பூக்கள் தான் இது ஒரு மருத்துவ குணம் கொண்ட பூவாகும். எடை குறைவது, மாதவிடாய் பிரச்சனை, செரிமான பிரச்சனை, நீரிழிவு நோய் பிரச்சனை, குடல் புண் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிற்கு ரோஜா பூ இதழ் மருந்தாகும்.இந்த பூக்கள் வீட்டில் இருப்பதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

அடுத்ததாக மல்லிகை பூ இது மனதை மயக்கும் வாசனை கொண்டது.காற்றினை சுத்தம் செய்யும் திறன் உடையது.இது நம் மன நிலைமையை மேன்படுத்தும் திறன் உடையது.இது நல்ல எண்ணங்களை வளர செய்கிறது.

இதைத்தொடர்ந்து துளசி. துளசி மிக மருத்துவ குணம் வாய்ந்த செடி என்பது அனைவருக்குமே தெரியும். இது ஒரு மூலிகை செடி வகையில் உள்ளது.இதன் இலைகளை கோவிலில் அலங்கரிப்பார்கள். மேலும் இதன் இலைகளை அடிக்கடி மென்று தின்பது மிக நல்லது. இதன் மலர்கள் அழகு மற்றும் அமைதியான வாசனையை வீட்டிற்கு கொடுக்கும்

You may have missed