மாணவர்களின் சண்டையை நிறுத்த வந்த இடத்தில் ஆசிரியைக்கு மாணவர்களை கொடுத்த சர்ப்ரைஸ்…..!

அன்றைய காலத்தில் ஆசிரியர் என்றால் ஒரு பயம் உருவாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் தன் மாணவர்களுடன் சகஜமாக பழகியே பாடங்களை நடத்துகிறார்கள்.
இந்நிலையில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவர்கள் சண்டையிடுவதாக நடித்து ஆசிரியரை வர செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

தற்போது இந்த வீடியோவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ வில் மாணவர்கள் சண்டை இடுவது போன்ற சத்தம் கேட்டு ஆசிரியை ஒருவர் வகுப்பறைக்குள் ஓடி வருகிறார்.

உடனே அங்கிருந்த மாணவர்கள் பாப் வெடித்து கையில் பொக்கை கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வரவேற்கின்றனர். பின் தான் ஆசிரியைக்கு தெரிய வருகிறது மாணவர்கள் சண்டை இடவில்லை என்று . இதனால் மனம் நெகிழ்ந்த ஆசிரியையின் ஆனந்த கண்ணீரை இந்த வீடியோ வில் பார்க்கலாம்.