யுவன் தயாரிப்பில் ஸ்வீட் ஹார்ட் படத்தில் நடிக்கும் ரியோ… முதல் போஸ்டரை வெளியிட்ட சிலம்பரசன்…

இசை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவு அனைவரின் வாழ்விலும் இசை கலந்திருக்கும். தமிழ் சினிமாத்துறையில் ஒரு முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர் தான் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரின் பாடல்கள் அனைத்துமே ஹிட் தான் எனலாம். முக்கியமாக இவரின் பாடல்கள் எங்ஸ்டரை கவரும் விதமாகவே இருக்கும்.

சமீபத்தில் கூட இவர் விஜய் அவர்களின் தி கோட் படத்திற்கு இசையமைத்திருப்பார். அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த வகையில் இவர் முதல் தயாரித்த படம் தான் ஹரிஷ் கல்யாணின் பியார் ப்ரேமம் காதல். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் ஹை ஆன் லவ் படத்தையும் தயாரித்திருந்தார். இரு படங்களுமே இவருக்கு வெற்றியை கொடுத்தது.

இதை தொடர்ந்து இவர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேது பதி நடித்த மாமனிதன் படத்தையும் தயாரித்திருந்தார். இந்நிலையில் இவர் தற்பொழுது இவர் ஜோ படத்தில் நடித்து பிரபலமான ரியோ ராஜை வைத்து ஸ்வீட் ஹார்ட் படத்தை தயாரிக்கிறார். இனிதான் முதல் போஸ்டரை தற்போது சிம்பு அவர்கள் வெளியிட்டுள்ளார். ஜோ படத்தை போலவே இப்படமும் வெற்றி பெரும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
