நான் மும்பையில் செட்டில் ஆனதுக்கு ஜோதிகாதான் காரணம்… ரகசியத்தை உடைத்த சூர்யா…

சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து கலக்கி கொண்டிருக்கும் ஒரு நபர் தான் சூர்யா.இவர் மட்டுமல்ல இவரின் குடும்பத்தில் அனைவருமே சினிமாவுடன் தொடர்புடையவர்கள் தான்.இவரின் அப்பா,தம்பி மற்றும் மனைவி மூவருமே நடிகர்தான்.இவரின் நடிப்பில் உருவான கங்குவா படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளிவர உள்ளது.

இந்நிலையில் இவர் தற்பொழுது முழு நேரமாகவே மும்பையில் செட்டில் ஆகி விட்டார்.இதற்கு பலர் சூர்யாவும் ஜோதிகாவும் பாலிவுட்டில் கவனம் செலுத்த போவதாக சோசியல் மீடியாவில் பேசி வந்தனர். இதற்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் சூர்யா கங்குவா பட மீட்டிங்கில் பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,நான் மும்பைக்கு ஷிஃப்ட் ஆக ஜோதிகா தான் காரணம். ஆமாம் ஜோதிகா தனது 18 வயதிலே படிப்பிற்காகவும் நடிப்பிற்காகவும் சென்னை வந்து செட்டில் ஆனவர்.அதை தொடர்ந்து இன்றுவரை 27 ஆண்டுகள் இங்கையே இருந்துள்ளார்.அவருக்கும் அவரின் குடும்பம்,இடங்கள் என இருக்க வேண்டுமல்லவா அதனாலே நான் மும்பை சென்று செட்டில் ஆனேன் என தெளிவாக கூறியுள்ளார்.