சாச்சனாவுக்கு நடந்த கொடுமையை தட்டி கேட்கும் ரசிகர்கள்…. வார இறுதியில் VJSன் பதில் என்னவா இருக்கும்….?

மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக அறிமுகம் ஆனவர் தான் சாச்சனா . தற்போது இவர் BB-8ல் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்தார். நுழைந்த 24 மணி நேரத்திற்குள் எலிமினேஷன் செய்யப்பட்டு BB வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டார்.

எந்த ஒரு போட்டியும் நடத்துமுன் காரணம் ஏதும் இல்லாமல் வெளியே அனுப்பப்பட்ட சாச்சனாவிற்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரசிகர்கள் பிக் பாஸ்-ஐ கேள்வி கேட்டு வருகின்றனர். சிறுவயது பெண் எவ்வளவு ஆசைகளுடன் வந்திருக்கும் இப்படி காரணம் இல்லாமல் வெளியே அனுப்ப அவரை அழைத்துருக்க வேண்டாமே என ரசிகர்கள் ஆக்ரோஷமாக கேவி கேட்டுள்ளனர்.

போன சீசனில் இப்படித்தான் கமல் அவர்கள் பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். அதேபோல் இந்த சீசன் தொடக்கத்திலே சாச்சனாவை வெளியேற்றி மக்கள் செல்வன் VJS மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளார்.
இந்நிலையில் வார இறுதியில் இத்தனை கேள்விக்கும் VJS என்ன பதில் சொல்வார் என்றும் ஒருவேளை சாச்சனா திரும்பவும் உள்ளே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.