15 வருட கொண்டாட்டத்தின் பின்னால் இருக்கும் முகம் தெரியாத நபர்கள்… சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் போலவே இருக்கும் ஸ்டண்ட் நடிகர்..!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிப்பில் ஏ.வி.எம் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ,ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பில் வெளியான சிவாஜி படம் 2007-ம் ஆண்டு வெளிவந்து பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இந்த வருடம் படம் வந்து 15 வருடங்கள் ஆனதையொட்டி படத்தினை கொண்டாடும் விதமாக ஏ.வி.எம் தயாரிப்பு நிறுவனம் சிறிய பட தொகுப்பை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 2007-ம் ஆண்டில் சிவாஜி படம் புரிந்த சாதனைகள் அடக்கிய தொகுப்பு இடம்பெற்றுள்ளது.

சிவாஜி படம் இந்திய, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,மலேசியா மற்றும் ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் ஒரே மாதிரியாக திரையிடப்பட்டுள்ளது. 700 காட்சிகள் 70 திரையரங்குகளில் இலங்கையில் வெளிவந்துள்ளது. 800 பதிப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது, தமிழ்நாட்டில் 300 திரையரங்குகளிலும், ஆந்திர பிரதேசத்தில் 340 திரையரங்குகளிலும், 175 நாட்கள் ஓடியுள்ளது. உலகலளவில் ஏற்பட்ட சவால்களை தவிடுபொடியாக்கி மாபெரும் வெற்றிபெற்றுள்ளதை தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த கொண்டாட்டத்தினை சூப்பர் ஸ்டார் அவர்களும் இயக்குனர் ஷங்கர் அவர்களும் தங்கள் சந்திப்பின் மூலம் பகிர்ந்துள்ளனர். சிவாஜியும் நான் தான்…….எம்ஜிஆரும் நான் தான்…….என்ற வசனம் தமிழக மக்களிடையே பெரிதும் பிரபலம் அடைந்தது. சூப்பர் ஸ்டார் அவர்கள் மொட்ட பாஸாக நடித்து படத்தின் பிற் பகுதியில் படத்தின் வேகத்தினை கூட்டி நடிப்பிற்கும், ஆக்சனுக்கும், சண்டைக்காட்சிக்கும் வலு சேர்த்த கதாபாத்திரத்திற்கு சண்டை காட்சிகளில் பங்காற்றிய முக்கிய நபர் ஒருவரின் புகைபடம் இங்கே உள்ளது.
இவர் சண்டை காட்சிகளில் சூப்பர் ஸ்டாருக்கு டூப்பாக நடித்தவர். சூப்பர் ஸ்டார்ரை போலவே இருக்கும் அவரது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இவர் யார், தற்போது இவர் என்ன செய்கிறார், அவரின் விபரங்கள் என்ன என இணையவாசிகள் தகவல்களை சேகரித்து வருகின்றனர். அவரின் புகைப்படங்கள் இதோ …
