ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தடபுடலாக பூஜை போட்டு தொடங்கப்பட்ட சூர்யா 45-யின் படப்பிடிப்பு…

தற்போது வெளிவந்த கங்குவா படத்தில் தான் சூர்யா கடைசியாக நடித்திருப்பார். இப்படம் அந்த அளவு வெற்றியை இவருக்கு கொடுக்கவில்லை. மக்களிடையே ஒரு கலவையான விமர்சனத்தை மட்டுமே பெற்றது. அதை தொடர்ந்து சூர்யா 44 படத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இதனை தொடர்ந்து உடனடியாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் இப்படத்திற்கு தற்காலிகமாக மட்டுமே சூர்யா 45 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு சூர்யா மற்றும் த்ரிஷா இணைய உள்ளார்கள்.இதனாலே ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் இடையில்தான் வெளியாகி வைரல் ஆகியது.

கோவையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின் பணிகள் நாளை தொடங்க உள்ளதாகவும் கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. தற்போது இப்படப்பிடிப்பின் பூஜையில் கலந்து கொண்ட சூர்யா அவர்களின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.

You may have missed