எஸ்பிபி பாடலுக்கு இப்படி ஒரு பக்தரா.. 4 வருடங்களாக மலரஞ்சலி.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் நாற்பதாயிரம் பாடல்களை பாடி உலக புகழ் பெற்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றவர் எஸ்பிபி என்று அழைக்கப்படும் எஸ்பிபி பாலசுப்ரமணியம். இவர் தமிழ் சினிமாவில் பழைய நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர் காலத்தில் தொடஙகி தற்பொழுது உள்ள அஜித், விஜய் போன்ற நடிகர்களுக்கு வரை பாடல் பாடியுள்ளார் இவர் தமிழ் மக்களின் மனதில் என்றும் நீங்காத இடம் பெற்றவர் இவர் கடந்த 2020ல் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.


அவர் பாடிய பாடலானா “இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன்” என்ற பாடலை போல் அவர் இன்றும் அவருடைய ரசிகர்களின் மனதில் பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறார். இவருடைய மறைவு யாராலயும் ஏற்று கொள்ள முடியாத ஒன்று அவர் மறைந்தாலும் அவருடைய பாடல்கள் இன்றளவும் இசை அளவில் ஒலித்து கொண்டு தான் இருக்கின்றன. மேலும் அவருடைய நினைவு தினத்திற்கு ரசிகர்கள் பலர் மலரஞ்சலி செலுத்தி கொண்டு வருகின்றனர்.


அந்த வகையில் எஸ்பிபியின் தீவிர ரசிகரான ஹோட்டல் உரிமையாளர் மலரஞ்சலி செலுத்தி வரும் வீடீயோஸ் தான் இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. ஹோட்டல் உரிமையாளர் பாக்கிய சீலன் 4 வருடங்களாக தன்னுடைய ஹோட்டலின் முகப்பில் எஸ்பிபியின் உருவ படத்தை வைத்து மலரஞ்சலி செலுத்தி வருகிறார். எஸ்பிபி மீது அதிக பற்று உடைய இந்த ஹோட்டல் உரிமையாளர் சிறுவயதில் இருந்தே எஸ்பிபி பாடல்களை கேட்பதில் அதிக அளவில் ஆர்வமாக இருந்துள்ளார்.

காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை அவருடைய பாடலை கேட்டால்தான் முடிவடையும் என்று கூறியுள்ளார். மேலும் எஸ்பிபியின் எந்த பாடல் எந்த படத்தில் வரும் எனவும் எஸ்பிபியின் அனைத்து பாடல்களும் எனக்கு காணாமல் தெரியும் எனவும் அவருக்கும “நான் ரசிகன் அல்ல அவருடைய பக்தன்” எனவும் கூறியுள்ளார்
மேலும் எஸ்பிபி மறைந்த செய்தி கேட்டு அவருடைய போட்டோவை நுழைவு வாயிலில் அஞ்சலிக்காக வைத்த நான் எடுக்க மனம் இல்லாமல் 4 ஆண்டுகளாக அஞ்சலி செலுத்தி வருகிறேன் எனவும் அவர் இறக்கவில்லை உயிருடன் தான் இருக்கிறார் எனவும் கூறியுள்ளார். இவருடைய இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பார்த்து இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

You may have missed