அதிர்ஷ்டம் வந்தால் இப்படித்தான் வரனும்… காமெடியை விட்டுவிட்டு தொடர்ந்து கதாநாயாகனாக நடிக்கும் புரோட்டா சூரி…

தமிழ் சினிமாத்துறையில் காமெடி நடிகராக கால் பதித்தவர் தான் நடிகர் சூரி. இவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் வந்து நகைச்சுவை செய்து தன் முகங்களை காட்டி வந்துள்ளார். வெண்ணிலா கபடிக்குழு படத்தில் வந்து மக்களிடையே பிரபலமானார். இவர் இப்படத்தில் புரோட்டா விரும்பியாக வருவதால் இவரை இன்றுவரை புரோட்டா சூரி என்று தான் அழைத்து வருகிறார்கள்.

சூரி மற்றும் சிவகார்த்திகேயனின் ஜோடி பொருத்தத்தில் வரும் அனைத்து நகைச்சுவை சீன்களுமே மிக அருமையாக இருக்கும். தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த சூரி அவர்கள் முதன்முதலாக விடுதலை என்னும் படத்தின் மூலம் சினிமாத்துறையில் கதாநாயகனாக களம் இறங்கினார். இப்படம் மக்கள் மத்தியில் ஒரு மாபெரும் வெற்றியை பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமாருடன் கருடன் படத்தில் சூரி கதாநாயகனாக நடித்தார். இப்படமும் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகமும் வரவுள்ளது. கொட்டுக்காளி படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ளார் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் அடுத்து ஒரு படம் சூரி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். விடுதலை 2 இந்தமாதம் வெளிவர இருக்கும் நிலையில் இவர் தற்போது 4 படங்கள் மேல் கதாநாயகனாக மட்டுமே நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் காமெடி நடிகராக நடிக்கவும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் நடிகர் சூரி.

You may have missed