இளசுகளின் மனதில் இவ்வளவு தாக்கமா..யூடுயூப்-ல் பல மில்லியன் ஹிட் அடித்த கோல்டன் ஸ்பாரோ சாங்…!!

0

டாக்டர் படத்தில் ஹெராயினாக தமிழ் சினி துறையில் அறிமுகம் ஆகி இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் தான் ப்ரியங்கா மோகன் . தற்போது இவரின் பாடல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது .

பவர் பாண்டி , ராயன் போன்ற படங்களை இயக்கிய நடிகர் தனுஷ் இப்பொழுது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்கி வருகிறார். இளைஞர்களின் வாழ்கையில் இடைப்பட்ட வயதில் வரும் காதலை பற்றி இப்படம் இருக்கும் என பேசப்படுகிறது.


இப்படத்தில் பவிஷ், பிரியா வாரியர், வெங்கடேஷ் மேனன், அனிகா சுரேந்திரன், ரபியா கட்டூன், மேத்யு தாமஸ், ரம்யா ரங்கநாதன் என பலர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் வருகிறார். இப்படத்தில் இருந்து கோல்டன் ஸ்பாரோ சாங் தற்பொழுது ரிலீஸ் ஆகி இணையத்தில் வைரலாக போய் கொண்டிருக்கிறது. இப்பாடலில் ப்ரியங்கா மோகன் வருவது குறிப்பிடத்தக்கது. யுடியூபில் இப்பாடலின் லிரிக்ஸ் வீடியோ 2.5 கோடி வியூஸ் பெற்று வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed