ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை உதயநிதி ஷ்டாலினிடம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்…

சில வாரங்களாகவே தொடர்ந்து சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கனமழை பொழிந்து கொண்டு வருகிறது. இதன் பாதிப்பு காரணமாக பிரபலங்கள் பலரும் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

கனமழையை தொடர்ந்து ஃபெஞ்சல் புயல் பல மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பலர். இந்நிலையில் கனமழையால் பாதித்த மக்களுக்கும்,ஃபெஞ்சல் புயலால் அவதிப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் நடிகருமான விஜய் அவர்கள் நிவாரண உதவிகளை செய்திருந்தார்.

இந்நிலையில் இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 10 லட்ச நிவாரண தொகையை துணை முதல்வர் உதயநிதி ஷ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.
