அமரன் ப்ரோமோஷன் விழாவில் அடுத்த தளபதியா நான்..? ஓப்பனாக கூறிய SK..

சின்னத்திரையில் தன் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வெள்ளித்திரை வந்து தனெக்கென்று மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன் . இவரை நடிகர் எனலாம், பாடகர் எனலாம், தயாரிப்பாளர் எனலாம், ஒரு காலத்தில் கமெடியென் ஆகவும் இருந்தவர் எனலாம்.
தற்போது இவர் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய அமரன் படம் அக்டோபர் 31 ஆம் தேதி வெளிவர உள்ளது . ரங்கூன் படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கொடுத்த ராஜ்குமார் பெரியசாமியின் இப்படத்தில் சாய்பல்லவி ஹெரோயின் ஆக நடித்துள்ளார்.

இந்தியா ராணுவத்தில் பணியாற்றிய தமிழ்நாட்டின் முகுந்த் வரத ராஜனின் வீரமரணத்தை அடிப்படையாக வைத்தே இப்படம் இயக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதில் இராணுவவீரராக மிகவும் பொருத்தமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளியான GOAT மூவியில் SK கேமியோ வாக நடித்திருப்பார் . அதில் விஜய் அவர்கள் துப்பாக்கியை SK விடம் கொடுத்துவிட்டு கிரவுண்டில் இருக்கும் உயிர்கள் இப்போது உங்கள் கைகளில் என்று சொல்வார். அதற்கு SK நீங்கள் எதோ முக்கியமான வேலையாக போகிறீர்கள், நான் இதை பார்த்து கொள்கிறேன் என்ற டைலாக் வந்தது .

இதை மனதில் வைத்து அமரன் ப்ரோமோஷன் விழாவில் பத்திரிகையாளர் ஒருவர் நீங்கள் தான் அடுத்த தளபதியா என கேள்வி ஒன்றை எழுப்பினார். அதற்கு SK அவர்கள் தமிழ் சினிமா துறையில் “ஒரே ஒரு தளபதிதான்” “ஒரே ஒரு தலதான்” “ஒரே ஒரு உலகநாயகன் தான்” “ஒரே ஒரு சூப்பர் ஸ்டார்தான்” இருக்க முடியும் எனவும் நான் அவர்களின் நடிப்பை பார்த்து சினிமாவை கற்றவன். அவர்களைப் போன்று நல்ல திரைப்படங்களை கொடுக்க கடுமையாக உழைப்பேனே தவிர அவர்களாக ஆசைபட மாட்டேன் என்றார்.