சர்தார்-2 படத்தில் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா… சும்மா சீன உளவாளி கெட்டப்பில் கலக்குறாரே..!!

இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இவர் ஹீரோயிஸத்தையும் காமெடித்தனமாக நடிக்கும் ஒரு நடிகர். விஜயை வைத்து இவர் இயக்கிய குஷி படம் மக்களிடையே அவ்வளவு வரவேற்பை பெற்றது. இவரின் படம் ஒரு விஷயத்தை மட்டுமே மிக சுவாரசியமாக கொண்டு போவதாக இருக்கும்.

ஆனால் தற்போது வரும் படங்களில் இவர் வில்லனாக நடித்து வருகிறார். வில்லத்தனத்தை அரக்க குணத்தில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். மாநாடு, மார்க் ஆண்டனி மற்றும் ராயன் படத்திலும் வில்லன் வேடத்தில் கலக்கி இருப்பார். இவருடைய வசனம் மற்றும் நடிப்புத்திறமையில் மக்களை கவர்ந்திருப்பார்.

தொடர்ந்து தமிழ் மலையாளம் மற்றம் கன்னடம் போன்ற மொழிகளில் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. தற்போது இவர் சர்தார்-2 படத்தில் வில்லனாக நடிக்க போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்காக சீன உளவாளி போன்று கெட்டப்பெல்லாம் செஞ் பண்ணி நடித்துள்ளார். இவர் நடிக்கும் சீன் அனைத்தும் மிக சிறப்பாக வந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
