BB வீட்டிலிருந்து வெளியேறிய சிவகுமார்… 28 நாளுக்கு இவ்வளவு சம்பளம் வாங்கினாரா..!! வெளிவந்த தகவல்…

விஜய் டீவியில் செப்டம்பர் மாத இறுதியில் கோலாகலமாக தொடங்கப்பட்ட ரியாலிட்டி ஷோ தான் பிபி-8. கடந்த 7 வருடங்களாக இந்த ஷோவை உலக நாயகன் கமல் காஷன் தொகுத்து வழங்கினார். ஆனால் தற்போது இதை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் தொகுத்து வருகிறார். இதில் போட்டியாளராக 18 நபர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது எலிமினேஷன் மூலம் ஒவ்வொரு நபர்களாக வெளியேறி உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா,சுனிதா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு வெளியே சென்றனர். நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் வர்ஷினி வெங்கட், ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகிய 6 பேர் உள்ளெ வந்தனர். தற்போது 50 நாட்கள் BB வீட்டில் வெற்றிகரமாக கடந்து உள்ளது.

இந்த ஷோவில் வாரத்திற்கு வாரம் குறைவான வாக்குகளை பெற்று வருபவர்கள் எலிமினேட் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் வைல்ட் கார்ட் மூலம் உள்ளெ வந்த சிவகுமார் அவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து தற்பொழுது அவர் BB வீட்டினுள் இருந்ததற்கு வாங்கிய சம்பளம் கசிந்துள்ளது. வெறும் 28 நாட்கள் வீட்டினுள் இருந்த இவருக்கு ஒரு நாகலிக்கு 15 ஆயிரம் வைத்து மொத்தமாக 4 லட்சத்தி 20 ஆயிரம் பெற்றுள்ளார் என தகவல் கசிந்து வருகிறது.
