சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கும் முன்னணி ஹீரோ… யார் அந்த ஹீரோ தெரியுமா..??

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து முதல் இடத்தில் இருக்கும் நாயகர்களில் ஒருவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடித்து வெளிவந்த அமரன் படம் 300 கோடி மேல் வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது.

இப்படத்தின் வெற்றி இவருக்கு இதுவரை எந்த படத்திலுமே கிடைத்தது இல்லை எனலாம். இப்படம் ஒரு நிஜ வாழ்க்கையை மையமாகா கொண்டதால் மக்களிடையே ஒரு பலத்த வரவேற்பை பெற்றது.தற்போது இவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் SK அவர்கள் ஒரு படம் நடிக்க உள்ளார்.இப்படத்தில் சூர்யா தான் முதலில் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது .இதில் வில்லனாக நடிக்க தற்போது விஷால் மற்றும் ஜெயம் ரவியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். இருவருமே இதுவரை ஹீரோவாக நடித்திருப்பதால் இவர்கள் வில்லனாக நடித்தால் படம் எப்படி இருக்கும் என பார்க்கவே ரசிகர்களிடம் ஒரு ஆர்வம் கிளம்பியுள்ளது .
