சூர்யா நடிப்பில் வெளிவந்த கங்குவா படத்தை இயக்க சிறுத்தை சிவா வாங்கிய சம்பளம்… வெளிவந்த தகவல்…

சிறுத்தை படத்தை இயக்கியதன் மூலமாக தமிழில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் தான் சிவா. இவரின் இந்த படத்தின் பிறகு தான் சிறுத்தை சிவா என அழைக்கப்படுகிறது. வீரம் படத்தில் அஜித்தின் தம்பியாக வரும் நடிகர் பாலா அவர்களின் அண்ணன் தான் சிறுத்தை சிவா. இவர் முதலில் தெலுங்கில் தான் படங்களை இயக்கி வந்தார்.

சிறுத்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களை வைத்து தமிழில் படங்களை எடுக்க ஆரம்பித்தார். அந்தவகையில் வெளிவந்ததுதான் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம்,அண்ணாத்த போன்ற படங்கள். இதை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளிவந்திருக்க படம் தான் கங்குவா.

மக்களின் பலத்த எதிர்பார்ப்பின் பிறகு வெளிவந்த இப்படம் முதல் நாளிலே 45 கோடி முதல் 50 கோடி வரை வசூல் பெற்று சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை இயக்குவதற்கு சிறுத்தை சிவா 5 கோடி சம்பளம் வாங்கியதாக தற்போது தகவல் காட்டு தீ போன்று பரவி வருகிறது.
